Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/புண்ணியச் செயல்கள் செய்வோம்

புண்ணியச் செயல்கள் செய்வோம்

புண்ணியச் செயல்கள் செய்வோம்

புண்ணியச் செயல்கள் செய்வோம்

ADDED : ஜூலை 11, 2010 10:07 PM


Google News
Latest Tamil News
* சொர்க்கத்தை நாம் தேடிப் போக வேண்டியதில்லை. கட்டுப்பாடான வாழ்க்கை,

நல்லொழுக்கம், பிறரிடம் நாம் காட்டும் அன்பு, நமக்கு உதவ முடியாத ஜீவன்களிடமும் காட்டும் தயை, இவற்றினால்

நம்முடைய மனத்துக்குக் கிடைக்கும் நிறைவே சொர்க்கமாகும்.

* முயற்சியால் ஒருவன் செல்வத்தைத் தேடிச் சேகரித்துக் கொள்ள முடியும். அதேபோல, அவன் செய்யும் நற்காரியங்களால் புண்ணியத்தையும் தேடிக் கொண்டு, அதன் பலனை அனுபவிக்க முடியும். செல்வம் நமது வறுமை காலத்தில் உதவுவது போல, புண்ணியம் சிரமமான

சமயங்களில் ஏற்படும் துன்பங்களிலிருந்து நம்மை காக்கும்.

* மனிதன் முன்னேறுவதற்கு கல்வி அவசியம். நாம் பள்ளிக்கூடங்களிலும், கல்லூரிகளிலும் படிப்பது கல்வி ஆகாது. இவற்றால் நாம் ஞானம் பெறுவதில்லை. குறிப்பிட்ட நோக்கத்துக்காகப் படிக்கும் இந்தப்படிப்பு, நம்மிடையே போட்டி, பொறாமை, சூது போன்றவற்றையே உருவாக்குகிறது. இந்த நிலையிலிருந்து உயர்ந்து, நம்மை நாமே உணர வகை செய்வதே உண்மையான கல்வியாகும்.

-சாய்பாபா




      Our Apps Available On




      Dinamalar

      Follow us